ஆல்பம்: சர்வம் சாயி மயம்

பாடியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–
மனமே ! மனமே ! மனமே

பாபாவை நினைப்பாய் !

தினமே ! தினமே ! தினமே !

நினைத்தாலே சுகமே !

சாயினாதன் சன்னதி !

வேண்டி நின்றால் நிம்மதி !

(ம‌னமே !)

ஆண்டி என்று சொன்னவர்க்கே அரசனானவன் ! – தனை

அண்டி வந்த அடியார்க்கு தெய்வமானவன் !

கன்றைக் காக்கும் தாய்ப்பசு !

போலக் காக்கும் ஈசனாம் !

கோடி கோடி பக்தரின்

அன்பைக் கொண்ட நேசனாம் !

(சாயினாதன் சன்னதி !)

சீரடியில் அடிவைத்தால் கோடி புண்ணியம் ! – பாபா

ஈரடியைப் பணிந்தோர்க்கு ஏது சஞ்சலம்?

பாபா பாதம் சரணமே !

சேர்ந்தால் இல்லை மரணமே !

வெற்றி மேலும் மேலுமே !

சேரும் நாளும் நாளுமே !

(சாயினாதன் சன்னதி !)