ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–

அருள் என்னும் தேனூறும் மகரந்தமே !

சாயி ! மலர்பாதமே ! பாபா ! மலர் பாதமே !

அருள் தேடும் அடியார்கள் திருக்கூட்டமே ! – அவன்

பதம் நாடும் எப்போதும் வண்டாட்டமே !

(அருள் என்னும் தேனூறும் மகரந்தமே ! )

ஸ்ரீசாயி திருமாலின் அவதாரமே ! – அவன்

அருட்பார்வை யால்தீரும் நம்பாவமே !

துணையாகும் ‘ஓம் சாயி’ எனும் நாமமே ! – எட்டுத்

திசையாவும் ரீங்காரம் சாய் நாதமே !

(அருள் என்னும் தேனூறும் மகரந்தமே ! )

எழில்கொஞ்சும் சாய்நாதன் திருக்கோலமே ! – என்றும்

நிலையாகச் சுமப்பாயே என் நெஞ்சமே !

கலை, கல்வி உடன் சேர்ந்த சௌபாக்யமே ! – இங்கு

உனைச்சேரும் சேமங்கள் எந்நாளுமே !

(அருள் என்னும் தேனூறும் மகரந்தமே ! )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *