ஆல்பம்: சர்வம் சாயி மயம்

பாடியவர்: திரு. ராகுல்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–

அருணோதயம் ஆகின்றது !

ஆலய வாசல்கள் திறக்கின்றது !

கருணாகரன் சாயி தரிசனம் காண…

கருணாகரன் சாயி தரிசனம் காண…

கூட்டம் அலையாய் வருகின்றது !

கூட்டம் அலையாய் வருகின்றது !

(அருணோதயம் )

வேத மந்திரமும் ஓதிடவே !

நாத சுரம் இசை பாடிடவே …

பறவைகள் ஆனந்த ஆர்ப்பரிக்க…

மடந்தையர் பூஜைக்கு பூப்பறிக்க…

திருவிழாக் கோலமே சன்னதியில் !

குரு சாயி நாதனின் சன்னதியில் !

(அருணோதயம் )

அபிஷேகம் நிறைவாய் நடந்திடவே…

அலங்காரம் அழகினைச் சேர்த்திடவே…

ஆரத்தி கண்டிட ஆனந்தமே ! மன‌

பாரத்தை இறக்கிய பேரின்பமே !

நாளொன்று பிறந்தது அவன் அருளால் !

நாளெல்லாம் சென்றிடும் அவன் நினைவால் !

(அருணோதயம்)