ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: திரு. ப்ரசன்னா

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–

மாவிலை… தோரணம்…வீதி எங்கும் ஆடிடும் !

பூவினைத் தூவியே மேகம் வாழ்த்துப் பாடிடும் !

பாரினை ஆளும் ஷீரடி ராஜன்…

ஊர்வலம் வந்தான் !

பேர்சொல்லி பாடும்…பக்தரைத் தேடி…

வாசலில் வந்தானே !

வாசலில் வந்தானே !….வாசலில் வந்தானே !

கோரஸ்:

ஜெய ஜெய சாயி ! ஷீரடி சாயி ! சரணம் சரணம் சாயி !

ஜெய ஜெய சாயி ! ஷீரடி சாயி ! சரணம் சரணம் சாயி !

(மாவிலை)

சரணம் – 1

வீதியின் வழியிலே விதவிதமாகவே வாண வேடிக்கை நடந்திருக்கும் !

‘ஜெய ஜெய சாயி !’ எனும் கோஷம் – அதையும் தாண்டியே எதிரொலிக்கும் !

மங்கள வாத்தியம் மன்னவன் கீதத்தை மங்கலமாய் இசைக்கும் !

சங்கரன் சிவனே நேரெதிர் வந்த பாக்கியம் போலிருக்கும் !

கோரஸ்:

ஜெய ஜெய சாயி ! ஷீரடி சாயி ! சரணம் சரணம் சாயி !

ஜெய ஜெய சாயி ! ஷீரடி சாயி ! சரணம் சரணம் சாயி !

(மாவிலை)

சரணம் – 2

பாபா திருமுகம் செந்நிறமாகவே ஜெகஜ்ஜோதியாய் ஜொலித்திருக்கும் !

ஆஹா ! வீதியில் அருணோதயமா ! அற்புதக் காட்சி அனைவருக்கும் !

கடல்அலை போலவே கண்டவர் உள்ளங்கள் ஆனந்த ஆர்ப்பரிக்கும் !

கண்ணிமைக்காமல் பார்த்திட இன்னும் கோடி கண் கேட்கும் !

கோரஸ்:

ஜெய ஜெய சாயி ! ஷீரடி சாயி ! சரணம் சரணம் சாயி !

ஜெய ஜெய சாயி ! ஷீரடி சாயி ! சரணம் சரணம் சாயி !

(மாவிலை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *