ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: திரு. உன்னிகிருஷ்ணன்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–

பாண்டுரங்கன் கண்களிலேத் தெரியும் மின்னல் ஒளியை…

உன்னிடமும் காணுகிறேன் சாயி நாதனே !

பாண்டுரங்கனும் நீயே ! பரந்தாமனும் நீயே !

பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் !

(பாண்டுரங்கன் கண்களிலே )

சாந்தமுடன் தோன்றுவான் ! – ருத்ர‌

தாண்டவமும் ஆடுவான் !

சாம்பலினை மேனியிலே பூசும் சர்வேஸ்வரன் !

சாயி பாபா உன்னிடமும் அவன் குணத்தைக் காண்கிறேன் !

சிவ சங்கரன் நீயே ! திரு மூர்த்தியும் நீயே !

ஹர ஹர சிவ சாய் ! ஜெய ஜெய சிவ சாய் !

(பாண்டுரங்கன் கண்களிலே)

குருவை பணிந்து வணங்குவான் !

கோதண்டம் ஏந்துவான் !

அருமறை சொன்ன சத்தியத்தைக் காத்தவன் ஸ்ரீராமனே !

குரு தத்தர் எமக்களித்த கலியுகத்து ராமனே !

ஜெய ராமனும் நீயே ! ரகுராமனும் நீயே !

ஜெய ஜெய சாய்ராம் ! ஜகம் புகழ் சாய்ராம் !

(பாண்டுரங்கன் கண்களிலே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *