ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திருமதி. காயத்ரி கிரீஷ்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@paattufactory.com
————————————————————————–
அன்னை காமாக்ஷி அருட்கடலில் திளைத்து…
தன்னைத் தாயாக்கி…தனைத் தேடி வந்தோர்க்கு
அள்ளிக் கொடுத்தாயே அமுத மொழி முத்தை…! – அதைச்
சொல்லிக் கேட்டாலும் இனித்திடுமே சிந்தை !
சங்கரா ! சங்கரா ! சங்கரா ! சங்கரா !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர பாஹிமாம் !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர ரக்ஷமாம் !

சரணம் – 1
ஞாயிறு ஒளிமயமும் திங்களின் குளிர்முகமும்
ஆயிரம் தாய் மனதும் சேர்ந்தஎம் சத்குருவே !
செவ்வாய் மலர்ந்தருளி நீ அருள் செய்தால்…
இவ்வாழ்வு பூத்திடுமே ! இன்னல்கள் தீர்ந்திடுமே !

சங்கரா ! சங்கரா ! சங்கரா ! சங்கரா !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர பாஹிமாம் !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர ரக்ஷமாம் !

(அன்னை காமாக்ஷி )

சரணம் – 2
உன்னிரு கண்களுமே கருணை தேன் சொரியும்
பன்னீர் மலர்களெனக் காண்பவர் மனம் கவரும் !
ஞான ஒளிச் சுடராம் திருமேனி என்றும்…
ஞாலத்து மாந்தர்க்கு…நல்வழி காட்டிடும் !

சங்கரா ! சங்கரா ! சங்கரா ! சங்கரா !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர பாஹிமாம் !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர ரக்ஷமாம் !
(அன்னை காமாக்ஷி )

Uncategorized