சாயி சரஸ்வதி ! உந்தன் சன்னதி !
அளிக்கும் நிம்மதி ! வேறெங்கும் ஏதடி?
துனியில் வரும்உதி! மாற்றிடும் விதி !
மண்ணில் சொர்க்கமாம் நீ வாழும் ஷீரடி!

சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா!
வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா !

அன்னதானமாய் செய்ய சொன்னவள்!
என்ன வேண்டினும் எளிதில் தருபவள்!
அன்னை வடிவமாய் என்னை காப்பவள்!
அன்பின் ஆலயம் அவள் வாழும் ஷீரடி!

சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா!
வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா !

கல்விச் செல்வத்தை அள்ளித் தருபவள்!
கலைகள் யாவையும் கனிந்து அருள்பவள்!
வீணை ஏந்திடும் வாணி கலைமகள்!
சாயி ரூபமாய் அவள் வாழும் ஷீரடி!

சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா!
வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா !

செல்வம் அனைத்தையும் சேர்த்துத் தருபவள்!
உள்ளம் எங்கிலும் உயர்ந்து நிற்பவள்!
கமலம் ஏறிடும் லட்சுமி திருமகள் !
சாயி ரூபமாய் அவள் வாழும் ஷீரடி!

சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா!
வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா !

வீர தீரத்தை வளர்த்து விடுபவள்!
வெற்றி மாலையைச் சூட்டுகின்றவள்!
துர்க்கையானவள் தேவி மலைமகள்!
சாயி ரூபமாய் அவள் வாழும் ஷீரடி!

சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா!
வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா !

கலையின் அதிபதி! சாயி சரஸ்வதி!
செல்வம் தருவதும்…சாயி லட்சுமி !
வீரமளிப்பதும்..சாயி துர்க்கையே!
மூன்று சக்தியும் சாயி தெய்வமே!

சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா!
வரணும் சாயிமா ! அருள் தரணும் சாயிமா !

Picture from: babasaiofshirdi.org