பாடலை பார்க்க/கேட்க‌<—

புன்னைவனக் குயிலே !
சொல்லுறதக் கேளு !
மன்னவனாம் ஐயன் மந்திரத்தைப் பாடு ! (2)
வண்ண மலர்க் காடே !
வாசம் தரும் பூவே !
வள்ளல் புகழ் பாடுங்களேன் ! (2)

சாமி சரணம் ஐயப்பா !
சரணம் சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயா ! (2)

மென்மைதரும் காற்றே !
தென்றலேநீ கேளு !
பொன்னம்பல வாசன் பேரைச் சொல்லி பாடு (2)
அந்தரத்தில் அலையும்
அற்புதமே முகிலே !
அச்சன் அருள் பாடுங்களேன் ! (2)

சாமி சரணம் ஐயப்பா !
சரணம் சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயா ! (2)

பொங்கி வரும் நதியே !
கொஞ்சம்நின்னு கேளு !
பந்தளத்து ராஜன் பேரைச் சொல்லி பாடு ! (2)
வஞ்சியிளம் கிளியே !
பச்சை வண்ண அழகே !
ஐயன் அருள் பாடுங்களேன் ! (2)

சாமி சரணம் ஐயப்பா !
சரணம் சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயா ! (2)

துள்ளிவரும் இசையே !
உன்னைத் தந்ததாரு?
உன்னைத் தந்த தேவன் தேன்புகழைப் பாடு ! (2)
அள்ளித் தரும் தமிழே !
கொஞ்சி வரும் கவியே !
ஐயப்பன் பேர் பாடுங்களேன் ! (2)

சாமி சரணம் ஐயப்பா !
சரணம் சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயா ! (2)

உச்சி தொடும் மலையே !
ஓங்கிநிற்கும் மலையே !
அச்சுதனின் மைந்தன் ஐயனருள் பாடு ! (2)
அஞ்சுமலை அழகே !
ஐயப்பனின் குடிலே !
நெஞ்சுருகி சரணம் சொல்லு ! (2)

சாமி சரணம் ஐயப்பா !
சரணம் சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயா ! (2)