பாடலை பார்க்க/கேட்க‌<—
திந்தகதோம் ஆட்டமாடுவோம் !பேட்டை துள்ளியே…
ஐயப்பன்மாரே ! ஒன்னாக ஆட்டமாடுவோம் ! (2)
எருமேலி வந்தோமே ! இன்னும் கொஞ்சம் தூரமே !
ஐயப்பனப் பார்க்கப் போறோமே ! (2)
செவ் வண்ணம் பொன் வண்ணம் அத பூசிக்குவோம் !
நம் ஐயன் பொன்னையன் புகழ் பேசிக்குவோம் ! (2)

கோரஸ்:
திந்தகதோம் ! தோம் ! அய்யனய்யா !
திந்தகதோம் ! தோம் ! மெய்யனையா! (2)

கெட்டிமேளம் கொட்டியாடுவோம் ! இலைதழைகளை..
கையிலெடுத்துக்…கொண்டாடி ஆட்டம்போடுவோம் ! (2)
கன்னிச்சாமி ஆடுங்க ! பெரியச்சாமி ஆடுங்க !
ஆடும் மனம் அடங்கிடுங்க ! (2)
நம் எண்ணம் அ.. தெல்லாம் அந்த மணி கண்டனே !
என் நாளும் நன் நாளே தினம் அவனுடனே ! (2)

கோரஸ்:
திந்தகதோம் ! தோம் ! அய்யனய்யா !
திந்தகதோம் ! தோம் ! மெய்யனையா! (2)

கொச்சம்பல மேட்டிலிருந்து…வாவர் இருக்கும்…
கோ யிலுக்கு ஒன்னாக சேர்ந்துசெல்லுவோம் ! (2)
ஐயனவன் தோழராம் ! போரின்படை வீரராம் !
வாவரையும் வேண்டிக் கொள்ளுவோம் ! (2)
நம் மையன் முன் னாலே…எல்..லோரும் சமம்…!
மெய் யன்பே என் றென்றும் அது அவன்மந் திரம்..! (2)

கோரஸ்:
திந்தகதோம் ! தோம் ! அய்யனய்யா !
திந்தகதோம் ! தோம் ! மெய்யனையா! (2)

கர்வமெல்லாம் மாயமாகுமே…ஆடும் பொழுதே…
சர்வம்அந்த சாமிஎன சொல்லியாடுவோம் ! (2)
மிச்சமுள்ள தூரம்தான் ! உச்சந்தலை பாரம்தான் !
பக்கதுணை மணிகண்டன்தான் ! (2)
நம் ஐயன்..நம் அப்பன்..அந்த ஹரிஹரனே !
எந்நாளும் எப்போதும் நாம் அவன்சரணே ! (2)

கோரஸ்:
திந்தகதோம் ! தோம் ! அய்யனய்யா !
திந்தகதோம் ! தோம் ! மெய்யனையா! (2)