தேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்

தேய்பிறை அஷ்டமி - ஸ்ரீ கால பைரவர் பாடல்

Listen to the song in my Facebook page

அஷ்டமி திருநாளில்
இஷ்டமாய் உனைவேண்ட…
கஷ்டங்கள் தீருமே !
கால பைரவனே !

ஈஸ்வரன் சனி பகவான் போற்றிடும் குருவே !
வேண்டிய வரமருளும் கற்பகத் தருவே !

(கோரஸ்)
கால பைரவா ! சரணம் ! சரணம் !
காத்து அருளுவாய் ! சரணம் !

அஷ்டம சனி என்ன? ஏழரை சனி என்ன?
அஷ்டமி வழிபாட்டால் நல்லதே நடக்கும் ! (2)

பஞ்ச தீபமும் ஏற்றினோம் சன்னதியில்…
நெஞ்சின் குறை நீங்கி சேர்ந்தது நிம்மதியே ! (2)

(கோரஸ்)
கால பைரவா ! சரணம் ! சரணம் !
காத்து அருளுவாய் ! சரணம் !

காலனின் பயமில்லை ! யாருக்கும் பயமில்லை !
நீல மேனியனே ! உந்தன் துணையாலே ! (2)

செவ்வாடை சார்த்தியே செவ்வரளிப் பூவாலே…
தேய்பிறை அஷ்டமியில் பூஜை செய்திடுவோம்! (2)

(கோரஸ்)
கால பைரவா ! சரணம் ! சரணம் !
காத்து அருளுவாய் ! சரணம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *