hanuman

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் வென்றவன் ஸ்ரீ ஆஞ்சநேயன் !

மெட்டு: நீல வான ஓடையில்… (வாழ்வே மாயம்)
———————————————–

ராம தூதன் மாருதி !
நாமம் போற்றி நீதுதி!
பஞ்ச பூதம் யாவையும் வென்ற ஆஞ்ச நேயனாம் !
விடாமல் ராமன் பேர் சொல்லும்….(ராம தூதன்)

விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே! –> (ஆகாயம்)
சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே !
விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே!
சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே !
ஆழ்கடல் மீதிலே…
பாலமும் செய்தவன் ! –> (நீர்)
ஆழ்கடல் மீதிலே…
பாலமும் செய்தவன் !
ஸ்ரீராம ராம் ஜெயராம ராம்
சொன்னாலே உள்ளம் துள்ளும்..!
(ராம தூதன்)

வாலின் தீயில் இலங்கையை…எரியச் செய்தவன்..! –> (நெருப்பு)
வீசும் காற்றை எதிர்த்துமுன் கிழித்துச் செல்பவன் ! –> (காற்று)
மலையினைத் தாங்கியே –> (நிலம்)
மருந்தினைத் தந்தவன் !
மலையினைத் தாங்கியே
மருந்தினைத் தந்தவன் !
ஸ்ரீராம ராம் ஜெயராம ராம்
சொன்னாலே உள்ளம் துள்ளும்..!
(ராம தூதன்)