பாடலைக் கேட்க…<<

காவடியை ஏந்தி வந்தோம் ஆவலுடன் பாடி…- எங்க‌
காவலனாம் பழனி மல‌ ஆண்டவனைத் தேடி (2)
முத்து முத்துக் கண்ணாளன் – எங்க‌
சொத்து சுகம் என்றானான் ! (காவடியை)

கோவப்பட்டு மலையிலேறி கோவணத்தில் நின்னான் !- நின்னு..
ஞானப் பழம் தானேன்னுதான் ஆவணமா சொன்னான் !
பாசப்பட்டு பாடிகிட்டு பழனி மல போனா – அவன்
நேசப்பட்டு மனமிரங்கி வந்திடுவான் தானா !
ஆண்டி வடிவா காட்சி கொடுப்பான் !
அண்டி வந்துட்டா சாட்சி இருப்பான் !
வேண்டிக் கிட்டத வாரிக் கொடுப்பான் !
வள்ளலெனவே அள்ளிக் கொடுப்பான் !
சூரன்தல எடுத்த எங்க‌
வேலனுக்கு ஈடு…
யாருமில்ல பாரு…ஆமா…
நீயறிஞ்சா கூறு…
முத்தையன் முருகன் கந்தையன் குமரன்
எப்படி சொன்னாலும் வந்திடும் அழகன்…

காவடியை ஏந்தி வந்தோம்
ஆவலுடன் பாடி…- எங்க‌
காவலனாம் பழனி மலை
ஆண்டவனைத் தேடி

அப்பனுக்கே பாடஞ் சொன்ன மெய்யறிவுக் கொழுந்து ! – அவன்
அரோகரா கோஷமது பக்தருக்கு மருந்து !
பாத்திருந்தா போதுமவன் திருமுகமே விருந்து ! – அதில்
நம்மனசு நெறஞ்சிடுமே அடிபணிஞ்சு வணங்கு !
தாமரையில பூத்துப் பொறந்தான் !
பூவ‌மனசா சேத்து வளர்ந்தான் !
பச்ச மயிலில் ஏறி வருவான் !
பச்ச தமிழா ஆகி வருவான் !
சொக்கன்மகன் ஆனான்..நம்ம‌
சொக்கும் குகன் ஆனான்…
பக்கம் வந்து சேர்ந்தா – நல்ல‌
பக்கதுணை ஆவான் !
முத்தையன் முருகன் கந்தையன் குமரன்
எப்படி சொன்னாலும் வந்திடும் அழகன்…

காவடியை ஏந்தி வந்தோம்
ஆவலுடன் பாடி…- எங்க‌
காவலனாம் பழனி மல‌
ஆண்டவனைத் தேடி (2)
முத்து முத்துக் கண்ணாளன் – எங்க‌
சொத்து சுகம் என்றானான் ! (காவடியை)