கஜ லட்சுமி
——————-

ஓம் கஜ பீடாய ச வித்மஹே !
கமல வாசினி தீமஹே !
தன்னோ லட்சுமி ப்ரசோதயாத் !
————————

பல்லவி

வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !
வாரணம் சூழவே… வருகவே ! வருகவே ! (2)

குங்குமத்தாலே அர்ச்சனை செய்தோம் ! (2)
மங்கள வாத்தியம் இசைத்தோம் வருகவே! (2)

மங்கையர் குலமதன் விளக்கே வருகவே !

வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !
வாரணம் சூழவே… வருகவே ! வருகவே !

மூவரும் தொழுகின்ற மாதவி நீதானே !
தேவரும் பணிகின்ற பாரதி நீதானே !

சரணம் – 1
வானவர் யாவும் பூமழை தூவ..
வேதங்களோடு கீதம் பாட…(2)

வண்ணத் தேரினில்
வாரணம் பூட்டி
மின்னும் மேனியாள்
தோரணை காட்டி (2)

வருக ! வருகவே !
வர லட்சுமி !

மூவரும் தொழுகின்ற மாதவி நீதானே !
தேவரும் பணிகின்ற பாரதி நீதானே !
(வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !)

சரணம் – 2
சாமரம் வீசும் தோழியர் கூட
தாமரை பூவில் காட்சி தந்து… (2)

சின்னக் கைகளில்…
ஆபர ணங்கள்!
‘கிண் கிண்’ எனவே,
மெல்லிசை மீட்ட… (2)

வருகவே ! வருகவே !
வர லட்சுமி !

மூவரும் தொழுகின்ற மாதவி நீதானே !
தேவரும் பணிகின்ற பாரதி நீதானே !

(வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !)