தீபம் ஏற்றுவோம் வாருங்கள் ! – அது
ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் – நம்
ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் ! (2)
தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் சொல்லி
பாபா அருளை வேண்டிடுவோம் ! (2)

கோரஸ்:
தீபாவளியில் இன்பம் !
பாபா அருளால் பொங்கும் ! (2)

சரணம்
————-

தினம் தினம் துவாரக மாயியிலே
தீபம் ஏற்றுவார் ஸ்ரீ சாயி !
மன இருள் நீக்கி ஒளி காட்ட
மண்விளக் கேற்றுவார் ஸ்ரீ சாயி (2)

எண்ணெய் இல்லை என்றாலும்
தண்ணீரில் ஏற்றினார் ஸ்ரீ சாயி ! (2)

(தீபம் ஏற்றுவோம்)