Youtube link

அலைபாயும் மனமேநீ அலையாதிரு !
‘சிவனே’ன்னு எப்போதும் நிலையாயிரு ! (2)
பாரம்..உந்தன்…பாரம்…
பாரம்..உந்தன்…பாரம்…
படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2)
(அலைபாயும்)

ஒன்பது கோளும் அவன்வசம் தானே !
ஒவ்வொரு நாளும் அவன் சித்தமே ! (2)
இதையறியாமல் கடல் அலை போலே…
அலைவதேன் நீயும் எங்கெங்குமே…! (2)
பாரம்..உந்தன்…பாரம்…
பாரம்..உந்தன்…பாரம்…
படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2)
(அலைபாயும்)

முன்வினை யாவும் அவன்கணக் காகும் !
ஜென்மம் ஈடேற்றும் அவன் நாமமே ! (2)
நடப்பவை யாவும் அவன் செயலாகும்…
தெளிவடைந்தாலே பேரின்பமே…! (2)
பாரம்..உந்தன்…பாரம்…
பாரம்..உந்தன்…பாரம்…
படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2)
(அலைபாயும்)