பாடலாசிரியர்: ஸ்ரீதேவிபிரசாத்
பாடியவர்: பாம்பே சாரதா
இசை: D.V. ரமணி
YOUTUBE-ல் பாடலைக் கேட்க…
பல்லவி
———————
ஷீரடிக்கு வாருங்கள் !
சாயி முகம் பாருங்கள் !
நெஞ்சிலே நிம்மதி சேர்ந்திடுமே ! (2)
(ஷீரடிக்கு)
கோரஸ்:
ஷீரடியின் நாதன் கருணாகரன் ! (2)
தனை நாடி வருவோர்க்கு அவன் என்றும் காவலன் !
(ஷீரடிக்கு)
சரணம் – 1
——————
தேவனின் முன் கூடி – கை
கூப்பியே நாம் பாட…
கண்கள் ரெண்டும் கண்ணீர் கூட்டுமே ! (2)
ஐயனவன் பார்வையில் அருள் பாயுமே !
மெய்சிலிர்த்துப் போகுமே அந்நேரமே !
சாய் ராமா ! சாய் ஷ்யாமா !
பரந்தாமா ! பர மாத்மா !
எனும் கோஷங்கள் தான் கேட்குமே !
சாய் கோஷங்கள் தான் கேட்குமே !
கோரஸ்:
ஷீரடியின் நாதன் கருணாகரன் ! (2)
தனை நாடி வருவோர்க்கு அவன் என்றும் காவலன் ! (2)
(ஷீரடிக்கு)
சரணம் – 2
——————
ஆரத்தி நாம் காண..சுப
ஆரத்தி நாம் காண,,,
நெஞ்சில் உள்ள பாரம் நீங்குமே !
நறுமலர் மாலைகள் அவன் தோளிலே…
குறுகுறு என்றுதான் விளையாடுமே !
திருக் காட்சி ! இதைப் போல…
ஒரு காட்சி..வேறேது?
ஒரு ஆனந்த நிலையாகுமே…
பேரானந்த நிலையாகுமே !
கோரஸ்:
ஷீரடியின் நாதன் கருணாகரன் ! (2)
தனை நாடி வருவோர்க்கு அவன் என்றும் காவலன் ! (2)
(ஷீரடிக்கு)