யோகங்கள் அருளும் சனி பகவானே !
பாவ புண்ணிய பலன் தருவோனே ! (2)
காகம் மீதிலே உலவிடுவோனே ! (2)
காலம் என்னும் ஓடம் தன்னை
கரை சேர்த்திடுமோர் ஈசன் நீயே !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
சூர்ய தேவனின் மைந்தனே ஈசா !
பார்வை தன்னிலே அருளிடும் நேசா ! (2)
கார்ய சித்திகள் தந்திடுவோனே ! (2)
வீர்யம் கூடிய சக்தியும் நீயே !
சர் வேஸ்வரனே ! சனி பகவானே !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
வேண்டியே உனக்கு திருநள் ளாற்றில்…
தீபம் ஏற்றுவோம் எள் முடிச்சோடு ! (2)
மகர கும்பமே உன் திரு வீடு ! (2)
எள்ளிலே அன்னம் அன்புடன் சமைத்து
படைப் போமுனக்கு ஏற்றிடு வாயே !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
காரிருள் நிறத்தை விரும்பிடு வோனே !
பேரருள் புரியும் சனி பகவானே ! (2)
சீரும் செல்வமும் அளித்திடுவோனே ! (2)
ஏழரை ஆண்டு பொங்கிட நீயும்…
சௌ பாக்கியமே வாழ்வினில் சேரும் !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
அஷ்டம சனியாய் நீவரும் போது
கஷ்டங்கள் வருமே ! காப்பதும் நீயே ! (2)
புண்ணிய கார்யமே பரிகாரங்கள் ! (2)
இஷ்டமாய் ஈசன் தாமரை பாதம்
பணிந்தால் போதும் நீமகிழ்வாயே !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
ஆஞ்ச நேயரின் பலம் அறிந்தோனே !
ராம பக்தரை அரவணைப்போனே ! (2)
ஆயுள் காரகா ! அகிலாண் டேசா ! (2)
வாஞ்சையும் காட்டி வேகமும் காட்டும்
சிவ மாமணியே ! பவவினை தீர்ப்பாய்!
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
நேர்மையாய் கடமை ஆற்றிடுவோனே !
நீதி காத்திடும் சனி பகவானே ! (2)
மேற்கு திசையனே ! மந்த அசையனே ! (2)
நளமஹ ராஜன் வளம்பெறச் செய்த..
நள்ளார் தேவா ! நலமே தருவாய் !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
ஆறிரு ராசிகள் நகர்ந்திடுவோனே !
ஆறுதல் தா ! சனி பகவானே ! (2)
அந்தகாரனே ! அருந் தவத் தோனே ! (2)
ஏழையைக் கூட ராஜனாய் ஆக்கும்
வல்லோன் நீயே ! சனி பகவானே !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
தோஷங்கள் நீக்கும் நந்தியின் பூஜை
மஹாப் ப்ரதோஷம் உன் திருநாளில் ! (2)
ராகு தேவனின் நண்பனும் நீயே ! (2)
வன்னியினாலே..வேள்விகள் செய்தோம் !
வளமே தருவாய்…சனி பகவானே !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
நாலிரு குதிரை பூட்டிய தேரில்
ஏறி பவனியாய் வந்திடுவோனே ! (2)
நீல மாலையை அணிந்திடு வோனே ! (2)
நவக்ரகங்களிலே…ஈஸ்வரன் நீயே…
நலமே தருவாய் ! சனி பகவானே !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
காசியில் லிங்கம் நிறுவிய தாலே..
ஈசன் அன்படைந்த ஏழாம் கிரகனே ! (2)
கார்நிறக் கொடியைத் தாங்கிடு வோனே ! (2)
தீபப் ப்ரியனே ! தண்டா யுதனே !
தயைகாட் டிடுவாய் ! சனி பகவானே !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
ஆணவம் அழித்து அருள் தருவோனே !
தான தர்மங்கள் விரும்பிடு வோனே ! (2)
நீண்ட காலமாய் சுழன்றிடு வோனே ! (2)
குவளயம் ஆளும் குறுவடி வோனே !
கவலை தீர்த்து காத்திடு வாயே !
கோரஸ்:
சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் சனி பகவானே !
பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சனி பகவானே ! (2)
சாயா தேவியின் தனயா சரணம் !
மாய வாழ்விதன் தலைவா சரணம் ! (2)
பேதம் ஏதிலா ப்ரபலனே சரணம் (2)
பூசத்தின் ராஜன் பதமே சரணம் !
சுகமே தருவாய் ! சனி பகவானே !