பாடலை பார்க்க/கேட்க‌<---

பல்லவி

புல்லாய் பிறவி வேண்டும் ! – சாய்
ப்ருந்தா வனத்தில் துளிர்க்கும்…

புல்லாய் பிறவி வேண்டும் ! – சாய்
ப்ருந்தா வனத்தின் தரையில்…!

புல் ஆயிடினும் சில‌ நாள் தானே !
ஒரு கல்லாய் மாற்று சாய் பாபா ! (2)

புல்லாய் பிறவி வேண்டும் ! – சாயி
ப்ருந்தா வனத்தின் தரையில்…!

சாய் நாதா ! வரம் தருவாய் !
சரணம் சரணம் பாபா ! (2)

சரணம் – 1
———————-

உன் பதம் தீண்ட உள்ளம் மகிழ்வேன்..
அது என் புண்யம் பாபா ! (2)

நீ வரும் பாதை எங்கணும் நானே…
தாங்கிட வேணும் பாபா..(2)

சாய் நாதா ! வரம் தருவாய் !
சரணம் சரணம் பாபா ! (2)

(புல்லாய் பிறவி)

சரணம் – 2
———————

என்மேல் நீயும் அமரும் போது..
அக் கணம் நானே ராஜா! (2)

வேறவெர் பெறுவார் என்போல் பாக்யம்
பெருமிதம் கொள்வேன் பாபா ! (2)

சாய் நாதா ! வரம் தருவாய் !
சரணம் சரணம் பாபா ! (2)

(புல்லாய் பிறவி)