பர்த்தி நாயகன்…பாதம் போற்றுவோம் !
சத்ய சாயி ராம்…நாமம் பாடுவோம்..!
வெற்றி தந்திடும் சாயி தரிசனம் !
காணும் போதிலே கோடி புண்ணியம் !

கோரஸ்:
பர்த்தி சாயி ராம் ! ஜெய பர்த்தி சாயி ராம் !
சத்ய சாயி ராம் ! ஜெய சத்ய சாயி ராம் !

விந்தை செய்தவன் ! நம் வினைகள் தீர்த்தவன் !
தந்தை ஆனவன்…! நம் தாயும் ஆனவன் !
சிந்தை யாவிலும் நம்மை ஆள்பவன் !
சொந்த பந்தமும் அந்த‌ சத்ய சாயி ராம் !

கோரஸ்:
பர்த்தி சாயி ராம் ! ஜெய பர்த்தி சாயி ராம் !
சத்ய சாயி ராம் ! ஜெய சத்ய சாயி ராம் !

அன்பை வார்த்தவன் ! நம் அல்லல் தீர்த்தவன் !
அன்னை போலவே நமை அரவணைத் தவன் !
பக்தர் நெஞ்சிலே குடி இருப்பவன் !
பஜனை கேட்பதால் மகிழும் சத்ய சாயி ராம் !

கோரஸ்:
பர்த்தி சாயி ராம் ! ஜெய பர்த்தி சாயி ராம் !
சத்ய சாயி ராம் ! ஜெய சத்ய சாயி ராம் !

கன்றைக் காத்திடும் பசுவைப் போலவே
கண்ணைக் காத்திடும் இமையைப் போலவே
என்றும் பக்தரைக் காக்கும் தெய்வமாம்..
கருணை சாகரம் எங்கள் சத்ய சாயி ராம் !

கோரஸ்:
பர்த்தி சாயி ராம் ! ஜெய பர்த்தி சாயி ராம் !
சத்ய சாயி ராம் ! ஜெய சத்ய சாயி ராம் !

காந்தம் போலவே நம்மை ஈர்ப்பவன் !
அந்தம் ஆதியைக் கடந்து நிற்பவன் !
சாந்தி தருபவன் ! ப்ர சாந்தி வாசவன் !
சரணம் சரணமே ! சத்ய சாயி ராம் !

கோரஸ்:
பர்த்தி சாயி ராம் ! ஜெய பர்த்தி சாயி ராம் !
சத்ய சாயி ராம் ! ஜெய சத்ய சாயி ராம் !