திரு ஓ.எஸ்.அருண் அவர்களுடன்...
காஞ்சி மகான் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதான எனது புதிய குறுந்தகடில் 'பெரியவா என்னும் சொல்லுக்கே' என்ற பாடலை அருமையாகப் பாடிக் கொடுத்தார். அதோடு, பாடல் வரிகளின் எளிமையையும், வலிமையையும் மனதார பாராட்டி, தன் கச்சேரிகளில் பயன்படுத்த அனுமதியும் கேட்டுக்கொண்டார். அவரது பணிவுக்கும், பண்புக்கும் எனது நன்றிகள் !