வார்த்தாளி ! வாராகி !

வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்…
தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள்
பார்த்தாலே போதும்  பார்விட்டு பகை ஓடும்
பார்க்கின்ற நொடிப்போதிலே…

மனசெல்லாம் வாராகி

உந்துதலைத் தந்திடவே உருவானவள் !
பன்றி தலை பெண் உடலும் வடிவானவள்  !
சந்திரனும் சூரியனும் விழியானவள் !
சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் !

ஸ்ரீ வாராகி அனுக்ரக அஷ்டகம் – தமிழில்

பகையினை நாசமாக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ வாராகி அம்மனின் அஷ்டகம் (எட்டு பாடல்கள் கொண்டது). பொருளுணர்ந்து (more…)

பஞ்சமியின் நாயகியே ! – Part 2

பஞ்சமியின் நாயகியே வாராகிதேவி !
தாயே ! சிவ ரூபி ! தவ மேனியம்மா !
நெஞ்சமெலாம் கோயில் கொண்ட நீலியம்மா !
நலங்களெல்லாம் தருபவளே சூலியம்மா !

ஜெய ஓம் வாராகியே ! – பஞ்சமி பாடல்

ஏழு கன்னியரில் சிறந்தவளாம் வாராகி !
ஏர் கலப்பை கைகளிலே ஏந்திடுவாள் வாராகி !
ஏற்றமெலாம் தந்திடுவாள் வாராகி ! – நம்
எண்ணமெலாம் நின்றிடுவாள் தாயாகி !