ஆல்பம்: சர்வம் சாயி மயம்

பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–

என்னைச் சூழ்ந்திருக்கும் சாயி !
நெஞ்சில் ஆழ்ந்திருக்கும் சாயி !
என் நினைவெல்லாம் சாயி !
என் கனவெல்லாம் சாயி !
என் சர்வமும் சாயி மயம்..
என் சர்வமும் சாயி மயம்..

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

தனி தனி தனி தனியாக நான் போகும்போது
துணை துணை துணை துணையாகி வந்திடுவான் !
பிணி பிணி பிணி பிணி என்னை பீடிக்கும்போது
உதி உதி உதி உதிதந்து மீட்டிடுவான் !

காரியத்தில் தடை வந்தால் தகர்த்தி வழிகாட்டுவான் !
காருண்ய சீலனாகி கருணைமழை பொழியுவான் !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)

ஒரு ஒரு ஒரு ஒருதரம் திருமுகம் பார்த்தால்
மறு மறு மறு மறுதரம் பார்க்கத் தோன்றும் !
குரு குரு குரு குருவாரம் விரதமிருந்தால்…
திரு திரு திரு திருவாகும் வேண்டுதலே !

சாயிராமா என்று சொன்னால்…சங்கடங்கள் தீருமே !
செல்வமுடம் சேர்ந்தொரு சௌபாக்யம் கூடுமே !

(என்னைச் சூழ்ந்திருக்கும்)