சரவண பவனே !

சரவண பவனே ! சிவன் திருமகனே !
வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை
நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக்
கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !

ஆடி மாசம் அம்மனோட மாசம் !

ஆடி மாசம் அம்மனோட மாசம் !
வீதி எல்லாம் வேப்பிலையின் வாசம் !
தேடிப் போகும் பக்தர்கள் கூட்டம் !
தாவி அணைக்கும் தாயோட பாசம் !

மரத்தடியும் ஆலயம் !

மரத்தடியும் ஆலயம் ! மலைக்கோட்டையும் ஆலயம் !
அரசன் மனமும் ஆலயம் ! ஆண்டி மனமும் ஆலயம் !