ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–

“சாயி’ என்றழைத்திடு ஷீரடியின் நாதனை !

சாய்ந்திடுமே வேரடியாய் சூழுகின்ற வேதனை !

தாயின் மனம், தண்மை குணம் கொண்ட அந்த தேவனின்…

தாள் பணிந்து தண்டனிட தீண்டிடுமோ தீவினை !

(“சாயி’ என்றழைத்திடு )

ஆறுதலை அருளுகின்ற ஆண்டவனாம் சாயிராம் !

ஏழுலகம் ஆளுகின்ற வேந்தனவன் சாயிராம் !

எட்டு திக்கும் எதிரொலிக்கும் மந்திரமும் சாயிராம் !

ஏற்றம் தரும் வாழ்வளிப்பான் எங்கள்குரு சாயிராம் !

(“சாயி’ என்றழைத்திடு )

ஒன்பது நாள் வியாழனிலே நோன்பிருந்து வேண்டினால்…

வேண்டியதைத் தந்திடுவான் வள்ளல் குரு சாயிராம் !

அன்பு கொண்ட அடியவர்க்கு அள்ளித் தரும் சாயிராம் !

பண்புநலன் சேர்த்திடுவான் பக்தருக்கு சாயிராம் !

(“சாயி’ என்றழைத்திடு )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *