ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்

பாடியவர்: திரு. D.V.ரமணி

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–

வலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே ! – என்

வலி தீர்க்க வரவேண்டுமே !

கதியிங்கு நீதானே என்றென்றுமே…! -நல்

வழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே !

(வலி தீர்க்க வரவேண்டும் )

எண்சாண் உடல் கொடுத்தாய் ! – அதில்

எத்தனை எத்தனை வலி சுமப்பேன்?

பண்ணிய பாவமெல்லாம்…

மன்னித்து தயைபுரிவாய் !

புண்ணியம் சேர்த்தருளும் உன்பதம் சரணடந்தேன் !

உன்பதம் சரணடந்தேன் !

(வலி தீர்க்க வரவேண்டும் )

வலிமை நிறை இறைவா ! – உன்

வல்லமை மாட்சியை நான் அறிவேன் !

பூக்கரம் தீண்டி இங்கே…

நோவுகள் தீர்த்தவனே !

சீக்கிரம் வரவேண்டும்…ஷீரடி குருபரனே !

(வலி தீர்க்க வரவேண்டும் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *