ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திரு. ராகுல்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

இந்த ஆல்பம்…
ஐட்யூன்ஸில்
சாவனில்
அமேசானில்
ஸ்பாட்டிஃபையில்…
————————————————————————–
பாடலைக் கேட்க:

தெய்வீகக் குழல் ஊதி
நெஞ்சமெலாம் கொள்ளை கொண்டான்
கோகுலக் கண்ணன் அந்த பரந்தாமனே!
தெய்வத்தின் குரல் ஓதி
இதயத்தில் கோயில் கொண்டாய்
காஞ்சியின் மாமுனி பரமாச்சார்யரே !
பரமாச்சார்யரே ! பரந்தாமனே!
பரமாச்சார்யரே ! பரந்தாமனே!
(தெய்வீகக் குழல் ஊதி)
சரணம் – 1
திரிசூலம் தாங்கி திருநீறு பூசி
த்ரிலோகம் ஆள்பவன் பரமேசனே !
திருத் தண்டம் ஏந்தி திருநீறு பூசி
த்ரிகாலம் சொன்னவர் பரமாச்சார்யரே !

பரமாச்சார்யரே ! பர மேசனே !
பரமாச்சார்யரே ! பர மேசனே !
(தெய்வீகக் குழல் ஊதி)

சரணம் – 2
அனைத்தையும் அறிந்தும் அமைதியாய் இருந்து
அறிவொளி பரப்பிடும் பரப்ரம்மமே !
மகிமைகள் புரிந்தும் எளிமையாய் இருந்து
அன்பினைப் பரப்பினார் பரமாச்சார்யரே !

பரமாச்சார்யரே ! பரப்ரம்மமே !
பரமாச்சார்யரே ! பரப்ரம்மமே !
(தெய்வீகக் குழல் ஊதி)