ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திரு. O.S.அருண்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————–

பெரியவா என்னும் சொல்லுக்கே…

உரியவர் ஆனாய் சங்கரா !

அரிய நல் வேதங்கள் எல்லாம்

அறிந்த மெய் ஞானியே நீ சங்கரா !

(பெரியவா )

சரணம் – 1

காயத்ரி நீசெய்யும் கோலம் ! – அந்தக்

காட்சியில் தெரியும் தெய்வீகம் !

காமாக்ஷி தேவி கடாக்ஷம் ! – உந்தன்

காருண்ய முகத்தினில் ஜொலிக்கும் !

(பெரியவா )

சரணம் – 2

அருட்கரம் நீ காட்டும் போது – மெய்

சிலிர்த்திடும் கணநேரம் போதும் !

இருளினை அகற்றிடும் விளக்கு – என்

அகங்காரம் விரட்டும் உன் சிரிப்பு !

(பெரியவா )

Uncategorized