சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி

மங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி !
சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி ! (2)
தேய்பிறை சதுர்த்தியில் தேவனைத் தொழுவதால்…
வளர்பிறை ஆகுமே வாழ்வில் என்றுமே !

கோரஸ்:
சங்கடம் தீர்க்கும் சதுர்த்தியின் திருநாள் !
சங்கட நாசன கணபதி திருநாள் !

சரணம் -1
——————

சந்திரன் தவமிருந்து…
மங்கள கணபதியின்
வரங்களை தீர்க்கமாய் பெற்றதும் இந்நாளே ! (2)
அங்காரகன் அவனும்
கிரகப் பதவியோடு…
மங்கலன் எனும் பெயரும் பெற்றதும் இந்நாளே ! (2)

கோரஸ்:
சங்கடம் தீர்க்கும் சதுர்த்தியின் திருநாள் !
சங்கட நாசன கணபதி திருநாள் !

சரணம் – 2
———————
ஈஸ்வரன் சனிபகவான்
பார்வையால் வரும்தோஷம்
யாவையும் தீர்த்திடுமோர் புண்ணியத் திருநாளாம் ! (2)
நோய்நொடி தீர்த்துநல்
ஆயுளைக் கூட்டியே..
பாக்யமும் சேர்த்திடும் அற்புதப் பெருநாளாம் ! (2)

கோரஸ்:
சங்கடம் தீர்க்கும் சதுர்த்தியின் திருநாள் !
சங்கட நாசன கணபதி திருநாள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *