“முதா கராத்த மோதகம்” – திருமதி. M.S. அவர்கள் பாடிய அதே மெட்டில் பாட..
———————–

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

கரத்தில் கொண்டான் மோதகம் ! என்றென்றும் தருவான் மோட்சமே !

கரங்கள் சேர்த்து வேண்டினால் வரம் தரும் விநாயகன் !

குறைகள் தீர்க்கும் குணநிதி ! துணையற்றோர்க்கு அவன்கதி !

பிறை நிலாவைச் சூடிய…விநாயகன் சரணமே !

அசுரர் தேவர் நவநிதி…கணங்களுக்கும் அதிபதி !

உதித்தெழும் செஞ்சூரியன் போல் ஜொலிக்கும் கணபதி !

வணங்கிடாத பேருக்கு அவனிடம் அதி பயம் !

மஹேஸ்வரன் படைகளின் முழுமுதற் தளபதி !

கஜ முகா சுரன் வதம் செய்து லோகம் காத்தவன் !

கஜ முக ஸ்வரூபமாம் கருணை பொழியும் மேகமாம் !

பருத்ததோர் வயிற்றினன் ! பொறுமையின் பயிற்றினன் !

விரும்பியே வணங்கினால் அருள்தரும் விநாயகன் !

வேதம் போற்றிப் பாடிடும் வேழ முகத்து ஆண்டவன் !

நீலகண்டன் தலைமகன் ! நாக பரணம் பூண்டவன் !

கொடிய அரக்கர் கர்வத்தை அடக்கியிங்கு ஆண்டவன் !

வடியும் மதநீர் கூடிய வாரணத்து ஆண்டவன் !

சுந்தரமே ஏக தந்தம் ! வந்த தடைகள் நீக்கிடும் !

சிந்தைக்கரிய ரூபமாம் ! அந்த மில்லா நாயகன் !

எம னையே அடக்கிய சிவபிரானின் மைந்தனே !

தவ முனிகள் உளம்உறை விநாயகன் சரணமே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *