ஸ்ரீ மஹா பெரியவா ஆராதனை (2019) சிறப்பு பாடல்

வாங்கோ பெரியவா ! – திரும்ப
வாங்கோ பெரியவா ! (2)

கலிமுற்றிப் போனதுன்னு…
ஊருக்குள்ள பேசிக்கிறா !
களிப்புடன் வாழவில்லை..
கஷ்டத்துல தவிக்கிறா !

வாங்கோ பெரியவா ! – திரும்ப
வாங்கோ பெரியவா ! (2)

பருவ மழை பெய்யவில்லை !
பஞ்சப் பாட்டும் ஓயவில்லை !
நெஞ்சார‌ அன்பு மழை
நீங்க வந்து கொட்டுங்கோ !

வாங்கோ பெரியவா ! – திரும்ப
வாங்கோ பெரியவா ! (2)

பளபளக்கும் மின்விளக்கு !
பகலாக்கும் ராத்திரியும்…
சலசலக்கும் மனசுக்குள்ளே
இருள்சூழ்ந்து தவிக்கிறா !

வாங்கோ பெரியவா ! – திரும்ப
வாங்கோ பெரியவா ! (2)

புதுப்புது பிணிவந்து
பூதவுடல் வாட்டுதிங்கே ‍!
பழம்உருட்டி ஆசிதரும்
வைத்தியரே ! வாருங்கோ !

வாங்கோ பெரியவா ! – திரும்ப
வாங்கோ பெரியவா ! (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *