Youtube-ல் கேட்க
பல்லவி
தசரத ராம நவமி…
ஷீரடி சாயி பவனி..!
மத பேதமின்றி கூடி..
மகிழ்ச்சியில் திளைக்குது பூமி !

கோரஸ்:
ரகுபதி ராகவ‌ ராஜாராம் !
குருவடி சரணம் சாய் பகவான் !

சரணம்-1
கோபால்ராவ் குந்த் என்பார்க்குக்
கொஞ்சிட மழலை செல்வமதை
பாபா அருளிட பக்தருமே
கோலாகலமாய் கொண்டாட…
நமக்கெலாம் கிடைத்ததோர் உற்சவமே !
சாய்குரு நாதன் அற்புதமே !

கோரஸ்:
ரகுபதி ராகவ‌ ராஜாராம் !
குருவடி சரணம் சாய் பகவான் !

சரணம்-2
அல்லா ! அல்லா ! எனும் கோஷம்
உரூஸ் என்னும் ஊர்வலத்தில்…
எல்லாம் நீயே ஸ்ரீராமா..
உருக்கிடும் கோஷம் உற்சவத்தில்..
ஓர்வலமாய் இரு ஊர்வலமே…!
ஷீரடி கண்டதோர் அதிசயமே !

கோரஸ்:
ரகுபதி ராகவ‌ ராஜாராம் !
குருவடி சரணம் சாய் பகவான் !

சரணம்-3
அல்லா என்பதும் சாய்தானே !
அனந்த ராமனும் சாய்தானே !
எல்லாம் சாயி மயம்தானே !
எதிலும், என்றும் ஜெயம்தானே !
சாய்ராம் என்றே சொல்வோமே !
சஞ்சலம் இல்லை…காண்போமே !

ரகுபதி ராகவ‌ ராஜாராம் !
குருவடி சரணம் சாய் பகவான் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *