பல்லவி

ஜெய் ஜெய் சாய்ராம் ! ஜெய் ஜெய் சாய்ராம் !
என்றே பாடு நாள்தோறும் ! (2)

சாய் அருளால் வாழ்வினிலே…
தேடும் சுகங்கள் கைகூடும் ! (2)

ஜெய் ஜெய் சாயி..ஜெய் ஜெய் சாயி.. ஜெய் ஜெய் சாயிராம்..!

சரணம் – 1

கூடிய பாவம் தீரும்…!
நாடிய யாவும் சேரும்…! (2)

எதிர்வரும் இடர்கள் பனியென விலகும்…
எதிரிகள் இல்லை என்றாகும்…!

ஜெய் ஜெய் சாயி..ஜெய் ஜெய் சாயி.. ஜெய் ஜெய் சாயிராம்..!
ஜெய் ஜெய் சாயி..ஜெய் ஜெய் சாயி.. ஜெய் ஜெய் சாயிராம்..!

சரணம் – 2

தீவினை யாவும் விலகும் !
சீரிய பாதையும் தெரியும் ! (2)

நிழலென பாபா திருவருள் தொடரும்…
பயமிலை ஜெயமே என்றாகும் ! (2)