Youtube Link

ஏழு கன்னியரில் சிறந்தவளாம் வாராகி !
ஏர் கலப்பை கைகளிலே ஏந்திடுவாள் வாராகி !
ஏற்றமெலாம் தந்திடுவாள் வாராகி ! – நம்
எண்ணமெலாம் நின்றிடுவாள் தாயாகி ! (2)

கோரஸ்:
வாராகியே ! ஜெய் ஓம் வாராகியே !
வாராகியே ! ஜெய் ஓம் வாராகியே ! (2)

வாடிய பயிர்களையும் செழித்திடச் செய்திடுவாள் !
காய்ந்த நிலங்களையும் கொழித்திடச் செய்திடுவாள் ! (2)
தேடிய செல்வமெலாம் தேடிவந்து அவள்தருவாள் ! (2)
வேண்டுவோம் மனமுருக..ஓடிவந்து அருளிடுவாள் ! (2)

கோரஸ்:
வாராகியே ! ஜெய் ஓம் வாராகியே !
வாராகியே ! ஜெய் ஓம் வாராகியே ! (2)

கோபத்தில் உச்சம்தொடும் கோமகள் ஆனவளாம் !
காருண்யம் காட்டுவதில் கார்முகில் போலவளாம் !(2)
அதர்வண வேதத்தின் நாயகியாய் ஆனவளாம் ! (2)
அன்புர்கள் அழைத்திடவே சேவகியாய் ஆனவளாம் ! (2)

கோரஸ்:
வாராகியே ! ஜெய் ஓம் வாராகியே !
வாராகியே ! ஜெய் ஓம் வாராகியே ! (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *