பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) :
ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள்

தமிழாக்கம்:
ஸ்ரீதேவிபிரசாத்
Youtube link
**************************
கருடன் மீதுலவும் உன் சரண கமலம் அதை
மனதினில் நிதம் உருவேற்று !
மனதினில் நிதம் உருவேற்று !
என் தாபங்கள் தீர்த்திடு தேவா !
என் பாபங்கள் தீர்த்திடு தேவா !

கமல மலரே விழி ! கமல மலரே பதம் !
ப்ரம்மனும், இந்த்ரனும் தொழுவார் !
ப்ரம்மனும், இந்த்ரனும் தொழுவார் !
என் தாபங்கள் தீர்த்திடு தேவா !
என் பாபங்கள் தீர்த்திடு தேவா !

நாகப் படுக்கையனே ! காமன் தகப்பனே..என்
பிறவி பயத்தினை களைவாய் !என்
பிறவி பயத்தினை களைவாய் !
என் தாபங்கள் தீர்த்திடு தேவா !
என் பாபங்கள் தீர்த்திடு தேவா !

சங்கு சக்ரம் கொண்டாய் ! துஷ்டர் அசுரர் வென்றாய்!
சர்வ லோகம் உன்னடியில்!
சர்வ லோகம் உன்னடியில் !
என் தாபங்கள் தீர்த்திடு தேவா !
என் பாபங்கள் தீர்த்திடு தேவா !

நற்குண வடிவமே ! நிற்கதி தெய்வமே !
தேவரின் பகை அறுத்தவனே !
தேவரின் பகை அறுத்தவனே !
என் தாபங்கள் தீர்த்திடு தேவா !
என் பாபங்கள் தீர்த்திடு தேவா !

கருணை மிகுந்துவா ! முதன்மை பக்தன் நான்
பாரதி தீர்த்தனை காக்க !
பாரதி தீர்த்தனை காக்க !
என் தாபங்கள் தீர்த்திடு தேவா !
என் பாபங்கள் தீர்த்திடு தேவா !