Mookasaram PDF
484 Downloads
“மூக பஞ்ச ஷதி’ என்பது ஒரு சதகத்திற்கு 100 ஸ்லோகங்கள் என 5 சதகங்கள், 500 ஸ்லோகங்கள் கொண்டதாக ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸ்வாமிகளால் படைக்கப்பட்டது. ஊமையாக இருந்தவர் ஸ்ரீ காமாட்சியின் அருளால் பாடும் திறன் பெற்று படைத்த உன்னத காவியமாகும்.
காஞ்சி மஹா பெரியவர் இந்த ஸ்லோகங்களில் 31-ஐ தொகுத்து நமக்கென அளித்ததுதான் மூகசாரம் ! இந்த மேன்மையான தொகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தாய் இடம்பெற்றுள்ள ஸ்லோகங்களை, அதன் தமிழ் உரை மற்றும் கவிதை வடிவில் தருவதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும். எல்லோரும் படித்து பயன்பெறும் வண்ணம் PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை KINDLE, iPAD போன்றவற்றில் படிக்க ஏதுவான வடிவில் விரைவில் வெளியிடவும் திட்டம் உள்ளது.