சாயி பாபா என்று சொன்னால் சங்கடங்கள் தீரும்.. – அவர்

சன்னதியில் வணங்கி நின்றால் ஆறுதல்கள் சேரும்…

(சாயி பாபா என்று)

தொல்லை தரும் பலபலவாய் துன்பமெனும் பேயி.. – அதை

இல்லையென்று ஆக்கிவிட சொல்லிடு ‘ஓம் சாயி’

எல்லையில்லா கருணை வள்ள‌ல் எங்கள் குரு சாயி ! – தன்

பிள்ளையெனக் காத்திடுவார் பக்தர்களின் தாயி !

(சாயி பாபா என்று)

நோய் தீர்க்கும் அவர்கொடுக்கும் திரு நீறு சாம்பல்..! – வினை

மாய்த்து விடும் தஞ்சம் புகு அவர் பதமே ஆம்பல்..

வாய் திறந்து மனம் திறந்து ‘சாயி’ என்று சொன்னால்… – இங்கு

வாய்த்திடுமே கோடி சுகம் என்றென்றும் பொன்னாள்…!

(சாயி பாபா என்று)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *