FACEBOOK பதிவில் பார்க்க/கேட்க: இங்கே…

பாடலை யூட்யூப் சேனலில் பார்க்க/கேட்க‌: இங்கே…

—————————-

நூறாண்டு ஆனதே பாபா ! மனித உடல் நீங்கி ஒளியானாய் பாபா !
மாறாத அருள் மட்டும் பாபா ! – உன்
மாறாத அருள் மட்டும் பாபா ! – மண்ணில்
எந்நாளும் நிலைத்தாளும் பாபா !
மண்ணில் எந்நாளும் நிலைத்தாளும் பாபா !

(நூறாண்டு ஆனதே)

நான் மறைந்த பின்னாலும், எந்தன் சமாதி பேசும்
என்றாயே காண்கின்றோம் அது சத்தியம் ! (2)

படமாக உனைவைத்து தினம் பூஜை செய்தாலும் (2)
உடன் வந்து துணையாவாய் இது நிச்சயம் ! (2)

(நூறாண்டு ஆனதே)

தீராத நோய் தீர்க்க
ஓயாமல் நீவளர்த்த
தீயாலே வரும்உதியே மருந்தாகுமே ! – உன்
துனியாலே வரும்உதியே மருந்தாகுமே !

கூறாத பொன்மொழியா?
நீசொன்ன இன்மொழிகள்
இப்போது கேட்டாலும் விருந்தாகுமே ! – அவை
எப்போது கேட்டாலும் விருந்தாகுமே !

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம் !
ஷீரடி குருசாயி ஜெய சாயிராம் !
(2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *