பாடல் மெட்டு:

நாட்டுக்கோட்டை நகரத்தாரு…
நாடும் பிள்ளை யாருங்க? வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க?
பிள்ளையாரு பட்டி வாழும்
கற்பகத்தான் பாருங்க ! (2)
குலங்கள் எல்லாம் காக்கும் கண நாதன்..!
நலங்கள் எல்லாம் சேர்க்கும் சிவ பாலன்…!

கோரஸ்:
பிள்ளையாரு பட்டியில கற்பகத்தான்ங்க ! – அவன்
நல்லதெல்லாம் தந்தருளும் பிள்ளையாருங்க !
செல்ல பிள்ளையாருங்க !

வீட்டில் என்ன செய்யும்போதும்…
கேட்பதுவும் யாரைங்க? மூத்தவரை தானுங்க ! ஏதுன்னாலும் கேளுங்க !
மூத்தவரு யாரு? நம்ம,,
மூஷிகனே தானுங்க ! (2)
அவருகிட்ட கேட்டெ தையும் செய்வோம் !
ஐங்கரனே சரணமுன்னு சொல்வோம் !

கோரஸ்:
பிள்ளையாரு பட்டியில கற்பகத்தான்ங்க ! – அவன்
நல்லதெல்லாம் தந்தருளும் பிள்ளையாருங்க !
செல்ல பிள்ளையாருங்க !

பிள்ளைச் செல்வம் வேணுமுன்னு…
வேண்டிக்கிட்டா போதுங்க ! அருகம்புல்ல போடுங்க ! அர்ச்சனைகள் பண்ணுங்க !
பிள்ளை வரம் கொடுக்கும் அந்த‌
பிள்ளையாரைப் பாடுங்க ! (2)
வெள்ளை மனம் கொண்ட பிள்ளையாரு !
வள்ளல் குணம் கொண்ட பிள்ளையாரு !

கோரஸ்:
பிள்ளையாரு பட்டியில கற்பகத்தான்ங்க ! – அவன்
நல்லதெல்லாம் தந்தருளும் பிள்ளையாருங்க !
செல்ல பிள்ளையாருங்க !

ஞானம்தரும் படிப்பு வேணும்
நாலும் தெரிய வேணுமா? நல்ல வேலை வேணுமா? என்ன வேணும் கேளுங்க !
கற்பகமா தந்தி டுவார் !
அற்புதத்தை பாருங்க ! (2)
தோப்புக் கரணம் போட்டு புட்டா போதும் !
கேட்டதெல்லாம் கையிலதான் சேரும்!

கோரஸ்:
பிள்ளையாரு பட்டியில கற்பகத்தான்ங்க ! – அவன்
நல்லதெல்லாம் தந்தருளும் பிள்ளையாருங்க !
செல்ல பிள்ளையாருங்க !

மாலை சூடி வாழ்க்க துணை
சேர்த்துக் கொள்ள வேணுமா? வீடு செல்வம் வேணுமா? நலங்கள் சேர வேணுமா?
மோதகத்த படைச்சிவெச்சு
பக்தியோடு கேளுங்க ! (2)
கரிமுகத்தில் வெள்ளை மனம் பாரு…!
கணபதி போல வேறு இங்க யாரு?

கோரஸ்:
பிள்ளையாரு பட்டியில கற்பகத்தான்ங்க ! – அவன்
நல்லதெல்லாம் தந்தருளும் பிள்ளையாருங்க !
செல்ல பிள்ளையாருங்க !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *