Youtube-ல் கேட்க…
ஆடி வருமே யானை தல ! – நம்ம‌
ஆசை பிள்ளை யாரு தல ! (2)
நெஞ்சாற செஞ்சிடுவோம் வேண்டுதல – அவன்
தன்னால தந்திடுவான் ஆறுதல…! (2)

கோரஸ்:
நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்..
அவனப் போல இல்லை யாருந்தான் (2)

தேங்கா(ய்) ஒடைச்சா சூரையில ! – நம்ம‌
வாழ்வில் தருவான் மாறுதல…! (2)
துண்டாஅது ஒடையுமந்த சத்தத்துல..- அவன்
சந்தோசமா ஆயிடுவான் மொத்தத்துல…(2)

கோரஸ்:
நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்..
அவனப் போல இல்லை யாருந்தான் (2)

ஊருக்கெல்லாம் மூத்த புள்ள ! – நம்ம‌
நகரத்தாரின் வீட்டுப் புள்ள ! (2)
கற்பகமா தந்திடுவான் பேரருள..!…- நமைக்
கண்ணாட்டம் காப்பானே தொல்ல இல்ல !

கோரஸ்:
நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்..
அவனப் போல இல்லை யாருந்தான் (2)

ஞானப் பழத்தக் கேட்டதில.. – அவன்
தந்தான் நமக்கு பழனி மலை…! (2)
அண்ணாமல சாமியோட செல்லப் புள்ள – நம்ம‌
அண்ணன்போல் வழிகாட்டும் நல்லபுள்ள ! (2)

கோரஸ்:
நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்..
அவனப் போல இல்லை யாருந்தான் (2)

ஆல மரத்தின் அடியினில… – மலைக்
கோட்டை மேல..உச்சியில…!
சிம்மாசனம் தேவையில்ல ராஜாவப்போல – அவன்
நம்மோட நெஞ்சோட கோயில் கொள்ள…!

கோரஸ்:
நம்ம தல பிள்ளையாருதான்..ஆன்..ஆன்..ஆன்..
அவனப் போல இல்லை யாருந்தான் (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *