பாடலை பார்க்க/கேட்க<---
லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…! – வர
லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…
பாற்…க….டல் திரு மகளே !
வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு..! (2)
சுந்தர தேவி ! உன் பூ முகம்..
சந்திரன் போலே ஒளிர்கிறதே ! (2)
மோட்சம் அருளும் சௌந்திரதேவி !
ப்ருந்தா வனம்உறை லட்சுமியே வா வா! (2)
லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
பாற்…க….டல் திரு மகளே !
வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு….!
குங்குமமும் மஞ்சளும்கூட
கோரிக்கை வைத்தோம் அன்போடு ! (2)
ஜாதிப் பூவும் கோரோஜனமும்
படைத்தோம் அம்மா பாங்கோடு !
ஜில்லெனும் சந்தனம்..வாசம்வீசிடும்
சாம்பிராணி தூபம் கூட… (2)
அம்மா உந்தன் மனம்கவர்விதமாய்
அன்பாய் தந்தோம் ஏற்றிட வேணும்…! (2)
லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு….!
பாற்…க….டல் திரு மகளே !
வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
அக்ஷதையுடனே பரிமள திரவியம்
ஐவகை வில்வம், பூர்ண கலசமும்.. (2)
அம்மா உந்தன் மனம்கவர்விதமாய்
அன்பாய் தந்தோம் ஏற்றிட வேணும்…! (2)
லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
பாற்…க….டல் திரு மகளே !
வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
குண்டு மல்லி, செண்பகப்பூவும்
வண்டு தேடும் சாமந்தி பூவும்
நறுமண பாரிஜாதமும் (2)
அம்மா உந்தன் மனம்கவர்விதமாய்
அன்பாய் தந்தோம் ஏற்றிட வேணும்…! (2)
லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
பாற்…க….டல் திரு மகளே !
வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
ஜொலிக்கும் ஜரிகை தாங்கிடும் சேலை…
பச்சை நிறத்தினில் புது மேல் ஆடை…
தாழம்பூவால் அழகாய்ப் பிண்ணி…
தொங்கிட விடுவோம் கார்குழல் ஜடையை…! (2)
அம்மா உனக்கு எல்லாம் செய்வோம்
அன்பாய் என்றும் ஆதரிப்பாயே ! (2)
லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
பாற்…க….டல் திரு மகளே !
வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
வாழைப் பழமும், இலந்தம் பழமும்
செங்கனியான மாதுளம் பழமும்
பேர் இச்சையுடனே பேரீச்சை பழமும்
நற்கனி யெல்லாம் ஒன்றாய் சேர்த்து (2)
தாமரை மேல் உறை தாயே உன்னை
அன்பாய் என்றும் பூஜை செய்வோம் ! (2)
லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
பாற்…க….டல் திரு மகளே !
வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…!
திருப்பாற்…கடல்திரு மகளே !
வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…! (2)
வருவாயெம் வீட்டிற்கு…! (2)