ஆஞ்சநேயர்

பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் !

பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் ! அஞ்சனை தவப்புதல்வன் ! அன்பரின் முழு முதல்வன் ! (பஞ்ச பூதங்களையும்) ஆகாயம் —————— நெஞ்சிலே வீரமுடன்…விண்ணிலே தாவியவன் ! பந்தெனப் பகலவனைப் பிடித்தவன் தானன்றோ ! (பஞ்ச பூதங்களையும்) நீர் ——– அலையாடும் கடல்மீது மலைக்கல்லால் ஒருபாலம் மலைக்காமல் செய்தானே ! கடல் தாண்டி சென்றானே ! (பஞ்ச பூதங்களையும்) காற்று ————- திசைமாற்றும் பெருங்காற்றின் விசைமீறி எதிர் சென்று… சஞ்சாரம் செய்கின்ற‌ அவதாரம் அவனன்றோ ! (பஞ்ச பூதங்களையும்) நெருப்பு ————– அஞ்ஞானத் தீயர் சிலர் மெய்ஞ்ஞான சின்னமான… வால்மீது தீவைத்து தான் தீய்ந்து போனாரே ! (பஞ்ச