பல்லவி
—————
வரதா ! வரதா ! அத்தி வரதா !
வானவர் போற்றும் அத்தி வரதா ! (2)

சரணம்
————–

நான்முகன் ப்ரம்மன்
நடத்திய யாகம்
அழைத்திட வில்லை சரஸ்வதியை ! (2)

வெள்ளமென‌ வந்தாள் கலைமகளும்
வேள்வியை நிறுத்திட சினமுடனே.. (2)
காத்திட வந்தது நீ யல்லவா ! (2)

(வரதா ! வரதா !)

ஆனந்த தீர்த்தம்
அனந்த சயனம்
அற்புதமானது உன் கோலம் ! (2)

அத்திவனக் கோயில் கொண்டாயே !
ஐராவதம் மலையாய் மாறிடவே ! (2)
நாடிடும் அடியவர்க் கருள்பவனே ! (2)

(வரதா ! வரதா !)

நாற்பது ஆண்டாய்
நீருக்குள் இருந்தாய்…
மச்சாவ தாரம் தொடர்கிறதா ! (2)

வந்தாய் தரிசனம் அருளிடவே !
கண்டோம் உள்ளம் குளிர்ந்திடவே ! (2)
பேரருளானே ! நாரணனே ! (2)

(வரதா ! வரதா !)

பேரலை யாக..
கூடிய கூட்டம்…
பெருமானேஉன் பேர்பாடும் ! (2)

விண்ணையும் பிளந்திடும் ஒருகோஷம் !
வீதியில் துளசியின் புது வாசம் ! (2)
கோவிந்த ! கோவிந்த ! கேசவனே !‍  (2)

(வரதா ! வரதா !)

காஞ்சியின் நாதா !
உன்முகம் கண்டால்…
கூடிய பாவங்கள் மறைந்தோடும் ! (2)

வள்ளலென வரங்கள் கொடுப்பவனே !
நல்லதெல்லாம் தருவாய் கிரிதரனே ! (2)
வைகுண்ட நாதனே! தாள் பணிந்தோம் ! (2)

(வரதா ! வரதா)