Youtube Link
பாடியவர்: ராகுல்
இசை: D.V.ரமணி
****
ஷீரடியே கயிலையே !
சாயிநாதன் பரமனே !
பாபா சிவபெருமானே !…(2)
திரு நீறணியும் திருமூர்த்தியடி ! – அவன்
நாமம் சொல்லி கீதம் பாடுவோம் ! – அவன்
நாமம் சொல்லி கீதம் பாடுவோம் !
(ஷீரடியே கயிலையே !)
சரணம் – 1
தண்டமது கையிலே சூலம் ஆகுமே !
அண்டமே ஆடுமே சூலம் ஆடவே ! (2)
ஒளிமயமானவன் ! ஜொலிக்கின்ற சூரியன் ! (2)
அருள் தேடும் அடியார்க்கு
அவன் என்றுமே என்றும் அடிமையே .!
(ஷீரடியே கயிலையே !)
சரணம் – 2
ஒன்றுமிலா ஆண்டிபோல் ஆடை பூண்டவன் !
என்றுமே என்றுமே பூமி ஆள்பவன் ! (2)
கருணையின் சாகரம் ! கரையேற்றும் காவலன் ! (2)
சிவ சாயி ! ஹர சாயி !
அவன் ஷீரடி சாயி ! (ஷீரடியே கயிலையே !)