Youtube link

தொடங்கிடும் செயல்யாவும் ஜெயமாகவே…
தொடங்குவோம் பிள்ளையார் சுழியோடு ! (2)
கடந்திடும் வழிவரும் தடையெலாம்..
உடைபடும் நல்வழி தெரியுமே… (2)
தெரியும்..வழி..தெரியும் …
(தொடங்கிடும்)

Chorus:

அகிலம் தொடக்கம் பிள்ளையார் சுழியினிலே !
அனைத்தும் நடக்கும் நிதம்நல் வழியினிலே ! (2)

சரணம் – 1

முதல்வனை வணங்க மறந்தார் சிவனே !
முப்புரம் எரிக்க புறப்படும் முன்னே (2)
ஏறிய தேரின்..
நிலை தடுமாற…(2)
பிழை தன்னை உணர்ந்தாரே ! பின் பணிந்தாரே !
ஐயன் தாள் பணிந்தாரே!

Chorus:
அகிலம் தொடக்கம் பிள்ளையார் சுழியினிலே !
அனைத்தும் நடக்கும் நிதம்நல் வழியினிலே ! (2)

சரணம் – 2

வியாசரும் முதலில் வணங்கிட மறந்தார்
பதிணெண் புராணம் எழுதிடும் முன்னே ! (2)
வார்த்தைகள் வரவே…
மறுத் திடவே ! (2)
பிழை தன்னை உணர்ந்தாரே ! பின் பணிந்தாரே !
ஐயன் தாள் பணிந்தாரே!

Chorus:
அகிலம் தொடக்கம் பிள்ளையார் சுழியினிலே !
அனைத்தும் நடக்கும் நிதம்நல் வழியினிலே ! (2)

சரணம் – 3

வள்ளியை மணக்க வேலவன் நினைத்தான் !
சொல்லிட முடியாமல் அவன் தவித்தான்…! (2)
பிள்ளையார் நினைவால்
மன மகிழ்ந்தான் ! (2)
தன்காதல் கைகூட கொண்டாடினான் ! மனம் மகிழ்ந்தாடினான்!
Chorus:
அகிலம் தொடக்கம் பிள்ளையார் சுழியினிலே !
அனைத்தும் நடக்கும் நிதம்நல் வழியினிலே ! (2)