பல்லவி
வேதமே உலகின் ஆதாரம் – என்னும்
வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா !
சந்திர சேகரா ! தயாபரா !
(வேதமே உலகின் ஆதாரம்)
சரணம் – 1
நூல்கொண்டு படித்து அறிவது அல்லவே…!
வாய்மொழி சொல் கேட்டு அறிவதே வேதம் !
ப்ரபஞ்சம் முழுவதும்…வேதத்தின் த்வனி பரவ…
சகல சௌபாக்யம் வரும் என்றருள் மலர்ந்தாய் !
சங்கரா ! சங்கரா ! சங்கரா ! சங்கரா !
(வேதமே உலகின்)
(வேதமே)
சரணம் -2
ஞானத்தை வளர்க்கும் அமுதமே வேதமாம் !
ஞாலத்தில் ஒலித்திருக்கும் என்றுமே நாதமாய் !
வேதமே ஓதாத…ஆலயம் தன்னில்…
தேவன் வாழ்வதில்லை…! என்றதும் நீயே !
சங்கரா ! சங்கரா ! சங்கரா ! சங்கரா !