Download Mp3 audio (right click and select “Save Link as” or “Save Target as”)

மலோலன் மாதவன் மோகனன் !

கோபாலன் கேசவன் கோகுலன் !

சிம்மமென வந்தவனாம் !

நம்மைதினம் காப்பவனாம் !

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனாம் !

ஹரிஹரபுரம் ஆள்பவனாம் !

(மலோலன்)

சித்திரையில் சுவாதியிலே…

இத்தரையில் தோன்றியவன் !

பக்தரெலாம் பரவசமாய்..

பணிந்தேற்றும் பரந்தாமன் !

கூப்பிடுவார் குரல்கேட்டு

குறைதீர்த்து அருளுபவன் !

மன இருளை நீக்கிடுமோர்

திருவிளக்காய் ஒளிருபவன் !

(மலோலன்)

பூஞ்சோலைப் பூத்ததையே

பார்த்ததுபோல் ஆனந்தமே !

வாஞ்சையுடன் சிம்மனையே..

பார்த்திருக்கும் பொழுதுஎலாம் !

கர்ஜனையில் நமைச்சூழும்

கர்மவினை பொடித்திடுவான் !

அர்ச்சனைகள் செய்வோர்க்கு…

ஐஸ்வர்யம் சேர்த்திடுவான் !

(மலோலன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *