நம்ம தல பிள்ளையாருதான் !

ஆடி வருமே யானை தல ! – நம்ம‌
ஆசை பிள்ளை யாரு தல ! (2)
நெஞ்சாற செஞ்சிடுவோம் வேண்டுதல – அவன்
தன்னால தந்திடுவான் ஆறுதல…! (2)

அன்பென்றால் சாயி !

அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி !
எல்லாமே சாயி ராம் !
என்னோடு என்றும் கைகோர்த்து வந்து
துணையாகும் சாயி ராம் !

கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !

கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !
அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !

ஸ்ரீ குருவே போற்றி ! 

ஆல மரத்தடியில் பழுத்த ஞானப்பழம் !
நீலகண்டன் சிவபெருமான் திருஅவதாரம் !
தட்சிணாமூர்த்தி எனும் தென்முகக் கோலம்…

ஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை – பாடலாக…

ஸ்ரீ வரலட்சுமியே வரணுமம்மா !
மஹாலட்சுமியே சரணமம்மா !
வரலட்சுமி விரதம் வந்த கதையினை
பாடிட வந்தோம் கேளம்மா !

சரவண பவனே !

சரவண பவனே ! சிவன் திருமகனே !
வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை
நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக்
கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !

ஆடி மாசம் அம்மனோட மாசம் !

ஆடி மாசம் அம்மனோட மாசம் !
வீதி எல்லாம் வேப்பிலையின் வாசம் !
தேடிப் போகும் பக்தர்கள் கூட்டம் !
தாவி அணைக்கும் தாயோட பாசம் !

மரத்தடியும் ஆலயம் !

மரத்தடியும் ஆலயம் ! மலைக்கோட்டையும் ஆலயம் !
அரசன் மனமும் ஆலயம் ! ஆண்டி மனமும் ஆலயம் !