திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவன் – கீர்த்தனை
ராகம்: வாசந்தி
தாளம்: ஆதி
Youtube link
பல்லவி
———–
எவ்வளவு சொன்னாலும் போதுமா ? – திரு
எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே ! – உன்
பேரழகை..உந்தன் பேரழகை…!
(எவ்வளவு)

அனுபல்லவி
————–
அவ்வளவு அழகையும் அருகிருந்து…
செவ்விதழாள் தாயாரும் பார்த்து நாணுவதை…
(எவ்வளவு)

சரணம்
————
எவ்விதமாய் பிணி வந்து வாட்டிடினும்
பவ்வியமாய் உனை வேண்ட பனிபோல் ஆகும் !
திவ்விய க்ஷேத்திரனே ! வைத்ய ராகவா !
திவ்விய க்ஷேத்திரனே ! வைத்ய ராகவாஉன்
மருத்துவ மகத்துவத்தை பாட்டினிலே…

(எவ்வளவு)