Youtube link

சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும்
ப்ரதோஷ பூஜை…
ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை…

சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும்
ப்ரதோஷ பூஜை…
ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை…

நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய |
நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய

அந்தி வேளையில் நான்கரை மணிக்கு
நந்தி தேவனின் சன்னதியில்…
நம:சிவாய மந்திரம் சொல்லி…
சிவனடியார்கள் செய்யும் பூஜை…

நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய |
நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய

சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும்
ப்ரதோஷ பூஜை…
ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை…

ஞாயிற்றுக் கிழமை செய்திடும் பூஜை
சூரிய தசையின் தோஷம் தீர்க்கும்…
பிரிந்தே வாழும் குடும்பம் தன்னை
பரிவுடன் மீண்டும் ஒன்றாய் சேர்க்கும் !

நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய |
நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய

திங்கட்கிழமை பிரதோஷ பூஜை
சோமவார ப்ரதோஷமாம் !
மனதினில் அமைதி தந்திடும் நிறைவாய்
மனக் க்லேசங்கள் நீக்கிடும் முழுதாய் !

நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய |
நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய

செவ்வாய் கிழமை பிரதோஷ பூஜை
கவ்விடும் “ருணம்” எனும் கடன்சுமை தீர்க்கும் !
செவ்வாய் தோஷம் தீர்க்கும் அதுவே…
ரணமும், ருணமும் தீர்க்கும் பலனே !…

நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய |
நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய

புதன் கிழமை பிரதோஷ பூஜை
புதன் கிரகத்தின் தோஷம் நீக்கும்
ஞானம் கூட்டி படிக்காதோரையும்
ஞாலம் போற்ற படித்திட வைக்கும் !

நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய |
நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய

லக்னத்தில் குருவை கொண்டோர்க்கெல்லாம்
வியாழக் கிழமை பிரதோஷ பூஜை
குரு தோஷத்துத் தீமைக் குறைக்கும் !
நலங்களை சேர்த்து வாழ்ந்திட வைக்கும் !

நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய |
நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய

சுக்கிர தசை தான் நடைபெறுவோர்க்கு
வெள்ளிக் கிழமை பிரதோஷம் பூஜை
உறவுகள் மேலும் வளம்பெற செய்யும் !
செல்வங்களையும் அள்ளிச் சேர்க்கும் !

நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய |
நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய

மஹா ப்ரதோஷம் என்னும் விசேஷம்
சனிக்கிழமையின் பிரதோஷமாகும் !
பஞ்சமா பாவங்கள் நீக்கும் ! பரமன்
ப்ரதோஷ நாயகன் அருளைச் சேர்க்கும் !

நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய |
நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய