Youtube link

ஜெய கணேஷ ஜெய கணேஷ
ஜெய கணேஷ  தேவா !
உன் அம்மை உமாதேவி !
அப்பன் மஹாதேவன் !

ஒற்றை தந்தம், நான்கு கரம்,
தயை புரியும் திருவுளம் !
நெற்றியிலே எழிற் திலகம் !
எலியின் மீது ஊர்வலம் !

வெற்றிலையில் மாலையாம்
மலர்களிலே மாலையாம்
லட்டுடனே இனிப்புகள்..
படைத்திடுவார் பக்தர்கள் !

குருடருக்கும் கண் திறப்பாய் !
குஷ்டருக்கும் நோய் தீர்ப்பாய் !
வேண்டுவோர்க்கு பிள்ளைவரம்
செல்வமெலாம் நீ கொடுப்பாய் !

முதலில் உன்னை பூஜைசெய்து
அடிபணிந்திடு வோர்க்கு…
வளமுடனே வாழ வைப்பாய்
தடைகளெலாம் உடைத்து…